சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ! ரோகிணியை வீட்டில் சேர்த்துக்கொண்டது யார் பாருங்க..
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய மொத்த உண்மையும் வீட்டுக்கு தெரிய வந்துவிட்டது. அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு நிலையில் தனது தோழிகளிடம் சென்று உதவி கேட்கிறார் அவர்.
ஆனால் அவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதனால் எங்கே போவது என தெரியாமல் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் சென்று உதவி கேட்கிறார்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி செய்த தவறை எந்த குடும்பமும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க என சொல்லி பணம் கொடுத்து அனுப்ப பார்க்கிறார் விஜயாவின் தோழி.
அதன் பிறகு வில்லி சிந்தாமணி வீட்டுக்கு சென்று உதவி கேட்கிறார் ரோகிணி. அவரும் ரோகிணியை வீட்டில் தங்க வைக்க ஒப்புக்கொள்கிறார்.
என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு அனுப்ப வைக்கிறேன் என ரோகிணி சபதம் செய்கிறார். அதற்கு தான் உதவுவதாக வில்லி சிந்தாமணி சொல்கிறார். மீனாவை பழிவாங்க ரோகிணி தான் என் துருப்பு சீட்டு. இவளை வைத்து மீனாவை பழிவாங்குகிறேன், அந்த வீட்டையும் என் பெயருக்கு மாற்றுகிறேன் என சிந்தாமணி வேறு ஒரு திட்டம் போடுகிறார். ப்ரோமோவை பாருங்க.