மனோஜை நம்பி பெரிய தவறான முடிவு எடுக்கும் விஜயா, கடைசியில்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் சீரியல் ஆரம்பித்த நாள் முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
3 மகன்கள், மருமகள்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசைக்கொண்ட அண்ணாமலை குடும்பத்தின் கதையாக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் திருமணம் ஆனது முதல் ஏமாற்றி வரும் ரோஹினியின் நிஜ உண்மை குடும்பத்திற்கு தெரியவர விஜயா மனோஜிற்கு விவாகரத்து பெற போராடி வருகிறார். ஆனால் ரோஹினி இப்போதும் தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறார்.

இதற்கு இடையில் மனோஜ் புதிய ஆர்டர் கிடைத்த ஜோரில் மேலும் ரூ. 7 லட்சத்திற்கு மேல் கடன் வாங்குகிறார். ஆனால் ரோஹினி கடைக்கு வந்தால் விவாகரத்து கிடைக்காது என கூற விஜயா ஆர்டரை கேன்சல செய்ய கூறுகிறார்.
ஆனால் மனோஜ் இந்த ஆர்டரை நம்பி ரூ. 7 லட்சம் கடன் வாங்கிவிட்டதாக கூற குடும்பமே ஷாக் ஆகிறார்கள்.

புதிய புரொமோ
விஜயா மனோஜின் பணப்பிரச்சனையை போக்க தனது வீட்டை அடமானம் வைக்க முடிவு எடுக்கிறார். மனோஜிடம் உன்னை நம்பி தான் வீட்டை அடமானம் வைக்கிறேன் என கூற அவரோ கண்டிப்பாக கடனை அடைப்பேன் என்கிறார்.

விஜயா, சிந்தாமணி பேச்சை கேட்டு தனது வீட்டை அடமானம் வைக்க கையெழுத்து போட அண்ணாமலை கையெழுத்தை மனோஜ் போடுகிறார்.
தற்போது விஜயா சிந்தாமணி விரித்த வலையில் சிக்கியிருப்பது தெளிவாக தெரிகிறது. இதோ புரொமோ,