பணம் ஏமாற்றிய கதிரை நேரில் பார்த்த ரோஹினி, என்ன செய்தார் பாருங்க... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. கடந்த வாரம் சிந்தாமணி, மீனாவை பூ தொழிலில் இருந்து விரட்ட ஒரு சதி வேலை செய்தார்.
இதனால் அவருக்கு ரூ. 2 லட்சம் பண இழப்பு ஏற்பட்டிருந்தது, மீனா அழுகையை பார்த்து சிந்தாமணி மற்றும் விஜயா கொண்டாடினார்கள்.
ஆனால் மீனா எப்படியோ கடுமையாக போராடி ஸ்ருதி-சீதா உதவியுடன் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார். இன்றைய வார எபிசோடில் முத்து ஜெயிலுக்கு போனார் என மனோஜ் கூறிய விஷயத்தால் அது என்ன கதை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ரசிகர்கள் ஒன்று எதிர்ப்பார்க்க கதைக்களம் எப்படி செல்லுமோ பொறுத்திருந்து காண்போம்.
புதிய புரொமோ
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹினி, வித்யாவுடன் என ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்பும் போது பணம் ஏமாற்றிய கதிரை பார்க்கிறார்.
இவரும் மனோஜ் போல அவரை துறத்தி விரட்ட அவர் தப்பித்துவிடுகிறார்.