ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பின் உச்சமாக ஒரு கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது.
க்ரிஷ் பாட்டி உடல்நிலை சரியில்லாததால் அவனை முத்து-மீனா வீட்டிற்கு அழைத்து வர அதில் இருந்து பிரச்சனை சூடு பிடித்துள்ளது.
ரோஹினி எப்படியாவது க்ரிஷை வீட்டில் இருந்து வெளியேற்ற போராடி வருகிறார், அவனை தற்போது வித்யா வீட்டில் விட்டுள்ளார்.
கடையில் வேறு பணத்தை திருடிவிட்டார் ரோஹினி, அந்த பிரச்சனை இன்றைய ஸ்பெஷல் எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.
புரொமோ
இந்த வாரத்திற்கான சிறகடிக்க ஆசை புரொமோவில், ரோஹினி தனது மகனை புதுப் பள்ளியில் சேர்ப்பதோடு Hostelலில் சேர்த்துவிடுகிறார்.
ஆனால் அவனோ தான் இங்கே இருக்க மாட்டேன் என தனது அம்மாவிடம் கதறுகிறார். இன்னொரு பக்கம் மீனா எதர்சையாக ரோஹினியின் அம்மாவை பார்த்து என்ன நடந்தது என விசாரிக்கிறார்.