ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, பெயர் சொன்னாலே இது என்ன தொடர், எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என அனைத்தும் தெரிந்துவிடும்.
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் 850 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணாமலை-விஜயா என்ற ஜோடியின் மகன்களை சுற்றிய கதையாகவே உள்ளது.

இப்போது க்ரிஷை வீட்டிற்கு வர வைத்த ரோஹினி, மனோஜுடன் நெருக்கமாக்க என்னென்னவோ செய்கிறார். ஆனால் ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை, மீனாவும் ரோஹினி எப்போது உண்மை சொல்வார் என காத்துக் கொண்டிருக்கிறார்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ
புரொமோ
கடந்த வாரம் க்ரிஷ் மையப்படுத்திய கதைகளாக எந்த ஒரு பரபரப்பும் இல்லாத காட்சிகளாக சென்றது.

இந்த வார புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரோஹினியிடம், உன் மகன் க்ரிஷை கடத்தி வைத்துள்ளேன், எனக்கு ரூ. 2 லட்சம் வேண்டும் என PA மிரட்டுகிறார்.
இந்த விஷயம் தெரியாமல் அண்ணாமலை, க்ரிஷை கண்டுபிடி என முத்துவிட கூற மனோஜ்-விஜயா வழக்கம் போல் அவன் காணாமல் போனதே நல்லது என்பது போல் பேசுகிறார்கள்.