டாக்டர் பட்டம் வாங்க நினைத்த விஜயா கனவில் முத்து போட்ட இடி... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் ஒரே பிரச்சனையாக சென்றது. க்ரிஷ் பள்ளியில் ஏற்பட்ட காரணமாக அவரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப பிரச்சனை வர அந்த நேரத்தில் முத்துவின் கதையும் வெளியானது.
விஜயா ஏன் முத்துவை இவ்வளவு வெறுக்கிறார், சின்ன வயதில் என்ன தான் நடந்தது என சீரியல் தொடங்கிய நாள் முதல் மக்களுக்கு கேள்வி இருந்தது, அதற்கு இப்போதும் முடிவு தெரிந்துவிட்டது.
ரோஹினியும் எப்படியோ தனது அம்மாவிடம் மாற்றி மாற்றி பேசி அவருடன் க்ரிஷை அழைத்து செல்ல ஏற்பாடும் செய்துவிட்டார்.
புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ வந்துள்ளது. அதில் விஜயா டாக்டர் பட்டம் வாங்க என்னென்னவோ விஷயங்கள் செய்ய கடைசியாக ரத்த தானமும் செய்துள்ளார்.
அவர் செய்த காரியத்தை கண்டு குடும்பமே குழப்பத்தில் பார்த்தனர்.
பின் முத்து தனது அம்மா ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை பார்வதி அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார், அவரும் எல்லா விஷயத்தையும் கூறுகிறார்.
பொய் சொல்லி இப்படியொரு பட்டம் வாங்க கூடாது என அதனை கெடுத்துவிடுகிறார் முத்து, இதனால் விஜயா செம கோபம் அடைகிறார். இதோ புரொமோ,