மனோஜை தனியாக வர வைத்து வசமாக சிக்க வைத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ

By Yathrika Feb 26, 2026 07:30 PM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரில் சிறகடிக்க ஆசை.

கதையில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை தான் பெரியதாக சென்றது, அதையும் தாண்டி இப்போத சிந்தாமணி செய்த வேலையால் மீனாவிற்கு பெரிய பிரச்சனையாக அமைந்துவிட்டது.

மனோஜை தனியாக வர வைத்து வசமாக சிக்க வைத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai 26Th To 28Th February 2026 Promo

சிந்தாமணி அனுப்பிய பெண் மீனா வீட்டில் இருந்தால் உன் தாலிக்கு ஆபத்து என கூற விஜயா மிகவும் அழுது புலம்பினார், மீனாவை வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என கூற அண்ணாமலை கேட்பதாக இல்லை.

இன்றைய எபிசோடில், அந்த பெண் சொன்னது உண்மை, அவர் சொன்னால் அப்படியே நடக்கும் என விஜயாவிற்கு மேலும் பயத்தை காட்ட சிந்தாமணி கோவிலில் ஒரு செட்டப் செய்கிறார், விஜயா அதையெல்லாம் பார்த்து மேலும் பயப்படுகிறார்.

மனோஜை தனியாக வர வைத்து வசமாக சிக்க வைத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai 26Th To 28Th February 2026 Promo

புரொமோ

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில், ரோஹினி சொன்னது போல் மனோஜ் யாருக்கும் தெரியாமல் ஒரு ஹோட்டல் செல்கிறார். அங்கு ரோஹினியிடம் விவாகரத்த கொடுக்கிறேன் என பத்திரத்தில் கை எழுத்து போட கூறுகிறார்.

மனோஜை தனியாக வர வைத்து வசமாக சிக்க வைத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai 26Th To 28Th February 2026 Promo

ஆனால் ரோஹினி நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூற மனோஜ் வெளியே கிளம்ப முயற்சி செய்கிறார்.

அப்போது ரோஹினி நீ இங்கிருந்து சென்றால் நான் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்ட மனோஜ் உனக்கு என்ன தான் வேண்டும் என்கிறார்.

மனோஜை தனியாக வர வைத்து வசமாக சிக்க வைத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai 26Th To 28Th February 2026 Promo

அதற்கு ரோஹினி இந்த விவாகரத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்ற பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார். இனி மனோஜ் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

தற்போது வெளிவந்துள்ள இந்த புதிய புரொமோ இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US