உடல்நிலை சரியில்லாத மீனாவை ரூமை விட்டு அனுப்பிய விஜயா- முத்து எடுத்த அதிரடி முடிவு, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை எங்களுக்கும் இந்த சீரியல் மீது ரொம்ப ஆசை என கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் டிவியின் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது, வாரா வாரம் ரேட்டிங் எகிறி வருகிறது.
கடந்த வாரம் கதையில் மனோஜ் கடை திறக்கும் விழாவோடும், விஜயா மீனாவை அசிங்கப்படுத்தும் கதைக்களத்துடனும் முடிந்தது.
கடைசியாக வெளிவந்த புரொமோவில், ஸ்ருதியின் அம்மா வாங்கிய ஏசியை அண்ணாமலை வீட்டிற்கு அனுப்பி வைக்க முத்து தரமான பதிலடி கொடுத்திருந்தார்.
புதிய புரொமோ
இந்த வாரத்திற்கான புரொமோ தற்போது வெளியாகியுள்ளது, அதில் ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக உள்ளது. உடல்நிலை சரியில்லாத மீனாவை மனோஜ் அறையில் படுக்க வைத்துவிட்டு மாத்திரை வாங்க கடைக்கு செல்கிறார் முத்து.
ஆனால் மனோஜ் தனது அறையில் மீனாவை படுத்திருப்பதை விஜயாவிடம் கூற அவரோ உடல்நிலை சரியில்லாதவர் என்று கூட பார்க்காமல் அவரை தர தரவென அறையை விட்டு வெளியே அனுப்புகிறார்.
இதனை பார்த்த முத்து விஜயாவிடம் சண்டை போடுகிறார்.
மீனாவை மேலும் மேலும் விஜயா காயப்படுத்த முத்து ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அதாவது இனி மீனா உங்களுக்கு தவிர வேறுயாருக்கும் சமைக்க மாட்டா, வேண்டியதை அவர்களே சமைத்துக்கொள்ளட்டும் என அண்ணாமலையிடம் முத்து கூறுகிறார்.