மனோஜிற்கு ஆர்டர் பிடித்துக்கொடுத்து மாஸ் காட்டிய ரோஹினி, வெறுப்பில் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
3 பிள்ளைகள், மருமகள்கள் என சந்தோஷமாக கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர் அண்ணாமலை. ஆனால் அவரது ஆசைக்கு எதிராகவே குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சனை எழுந்து வருகிறது.
முதலில் ரோஹினி, இதுவரை பல உண்மைகளை மறைத்துள்ளார், அவரும் நியாயத்திற்கு கட்டுப்பட்டு அவரை மன்னித்து வந்தார்.

இந்த முறை திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து அதுவும் இனி என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்துவிட்டு ரோஹினி இப்படி செய்தது அண்ணாமலையால் மன்னிக்கவே முடியவில்லை.
அந்த பிரச்சனை ஒருபக்கம், இன்னொரு பக்கம் ஸ்ருதி, நீது சொன்ன விஷயத்தால் ரவி மீது கோபத்தில் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
புரொமோ
இன்றைய எபிசோடில், ரோஹினி நீங்கள் ஆர்டர் கேன்சல் செய்ததால் என்னை என் கணவர் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார், விவாகரத்து வரை சென்றுவிட்டது என மேனேஜரிடம் சென்று கூற அவரும் நம்பி ஆர்டர் தருவதாக ஒப்புக் கொள்கிறார்.
தற்போது சிறகடிக்க ஆசை புதிய புரொமோவில், மீனா அந்த அபார்ட்மென்டில் புதிய கடை திறக்கிறார், அதற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகிறார்கள்.

அப்போது ரோஹினி அந்த இடத்திற்கு வர விஜயா நீ ஏன் வந்தாய் என்கிறார், அதற்கு விஜயா மேனேஜர் வர சொன்னார் என கூற, மேனேஜர் உங்களுக்கு 60 வீட்டிற்கான ஆர்டர் கொடுக்கிறேன், உங்கள் மனைவிக்காக தான் என்கிறார்.
உடனே ரோஹினி இப்போது பிசினஸ் பார்ட்னர், எப்போதுமே நான் தான் உன் வாழ்க்கை துணை என கூற விஜயா செம கோபமடைகிறார்.