முத்துவை சட்டை பிடித்து கோபத்தில் திட்டிய ரவி... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
மகன்களுடன் சந்தோஷமாக ஒரே வீட்டில் இருக்க ஆசைப்படும் ஒரு மிடில் கிளாஸ் நபரின் குடும்ப கதையாக ஒளிபரப்பாகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
ரோஹினி உண்மை தெரிந்து அவரை வீட்டைவிட்டு அனுப்பிய பிறகு அவர் செய்த எல்லா விஷயத்தையும் வித்யா கூற அண்ணாமலையே செம ஷாக் ஆனார், அவள் இனி நமது குடும்பத்தின் மருமகள் கிடையாது என கூறியிருந்தார்.

இதனால் விஜயா விவாகரத்து வாங்கும் வேலையில் இறங்கினார். இதற்கு நடுவில் விஜயா-மனோஜை ஏமாற்றி சிந்தாமணி அவர்களின் வீட்டை எழுதி வாங்க பக்கா பிளான் போட்டு வருகிறார்.
இந்த பிரச்சனையே முடியாத நேரத்தில் நீது செய்த வேலையால் ரவி-ஸ்ருதி இருவரும் பிரிந்து இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை ஒருபக்கம் செல்கிறது.

புரொமோ
இன்றைய எபிசோடில், மீனா அபார்ட்மென்டில் கடை திறக்கும் விசேஷம் காட்டப்படுகிறது. அந்த இடத்திற்கு ரோஹினி வந்து இனி நாம் பிசினஸ் பார்ட்னர், உன் லைப் பார்ட்னர் என மனோஜிடம் கூறுகிறார்.

தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், ரவி திடீரென வீட்டிற்கு வந்து முத்து சட்டை பிடித்து ஏன் இப்படி செய்தாய், இவனை யார் இந்த விஷயத்தில் தலையிட சொன்னது என கோபப்படுகிறார்.
நீது ரெஸ்டாரன்டை தீ வைத்து எரித்துள்ளார், அவரின் வீட்டிற்கு சென்று காலை உடைத்துள்ளான் என முத்துவை பார்த்து ரவி திட்டுகிறார். இதோ புதிய புரொமோ,