முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ஒரு சோகமான காட்சி காட்டப்படுகிறது. அதாவது முத்துவிடம் சண்டை போட்ட செல்வம் கோபமாக கார் ஓட்டிச் செல்ல விபத்து ஏற்படுகிறது.
அதில் அருணின் தாயார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிடுகிறார். அவரின் இறப்பிற்கு முத்து தான் காரணம் என அருண் கூறி சண்டை போட எபிசோட் முடிவுக்கு வருகிறது.

இதற்கு இடையில் ரோஹினி, மனோஜை தன் வழிக்கு கொண்டு வர ஏதேதோ செய்கிறார். இன்னொரு பக்கம் நீதுவிற்கு இப்படி ஆனதை ஸ்ருதியிடம் மீனா கூற அவரது அம்மா-அப்பா அதற்கும் முத்து மீதே சந்தேகப்பட்டு பேசுகிறார்கள்.

புரொமோ
இந்த சீரியலின் புதிய புரொமோவில், ஸ்ருதி அப்பா தான் நீதுவிற்கு கால் உடைந்ததற்கும், ரெஸ்டாரன்ட் எரிந்ததற்கும் காரணம் என தெரிந்துகொள்கிறார். இந்த உண்மை ரவிக்கு தெரியவர ஸ்ருதி அப்பா வீட்டிற்கு வந்து அவரை மோசமாக திட்டிவிட்டு செல்கிறார்.

பின் முத்து காரணம் இல்லை என தெரிந்ததும் ரவி வீட்டிற்கு வந்து அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். இதோ புதிய புரொமோ,