பொய் சொல்லி குடும்பத்தை ஏமாற்றும் ரோஹினி, அதிரடி காட்டிய ஸ்ருதி... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் பாம்பு காமெடியுடன் முடிந்தது.
யோகா கிளாஸ் வரும் விஜயா, வீட்டில் பாம்பு வந்த விஷயத்தை கூறுகிறார், இதைக்கேட்டதும் சிந்தாமணி, பாம்பு ஒருவர் வீட்டிற்குள் வந்தால் பிரச்சனை வரும், இதனால் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வாருங்கள் என்கிறார்.

அந்த பயத்துடன் வீட்டிற்கு வந்த விஜயா அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிறார். ஒவ்வொருவரும் வேலை சொல்லி வர முடியாது என கூற பின் அண்ணாமலை-விஜயா எல்லோரையும் சம்மதிக்க வைக்கிறார்கள்.
ஸ்ருதி ரெஸ்டாரன்ட் சென்ற மீனா அங்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுப்பவராக இருந்தாரே அவரை சந்திக்கிறார்.

அவருடன் Building Construction செய்யும் நபரும் வந்துள்ளார். அவர்களிடம் மீனாவிற்கு பூ வியாபாரம் கான்டிராக்ட் கிடைக்கிறது. இன்னொரு பக்கம் மனோஜ் வியாபாரத்திற்கும் உதவும் வண்ணம் ஒரு விஷயம் செய்கிறார்.

புரொமோ
Building Construction செய்பவர் வீட்டு கட்டிக் கொடுப்பதுடன் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களுடன் வீட்டைக் கட்டி கொடுக்கிறார். இதனால் மீனா அவர்களிடம் மனோஜ் கடை பற்றி கூறியதால் அவருக்கு ஆர்டரும் கிடைக்கிறது.

இந்த விஷயத்தை வீட்டில் கூறி மனோஜ்-ரோஹினி சந்தோஷப்படுகிறார்கள், ரூ. 40 லட்சம் லாபம் என்றும் கூறுகிறார்கள்.
ரோஹினி தன்னால் தான் இந்த ஆர்டர் கிடைத்தது என பெருமையாக கூற ஸ்ருதி மீனாவால் தான் உங்களுக்கு இந்த ஆர்டர் கிடைத்தது, ஏன் இப்படி கூறினீர்கள் என கோபமாக கேட்கிறார். இதோ புதிய புரொமோ,