என்னது முத்துவின் காதலியா, போட்டோ பார்த்து ஷாக் ஆகும் ரவி.. சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் புரொமோ

By Yathrika Sep 04, 2026 12:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்.

இன்றைய எபிசோட் கதையில், மீனா-ஸ்ருதி இருவரும் இரவு யாருக்கும் தெரியாமல் பிரியாணி சாப்பிட்டதால் அது ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுத்துள்ளனர்.

இதனை தவறாக புரிந்துகொண்ட குடும்பத்தினர் இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என கொண்டாட கடைசியில் அவர்கள் பிரியாணி சாப்பிட்டதால் ஆனது என கூற முத்து-ரவி கவலைப்படுகிறார்கள்.

என்னது முத்துவின் காதலியா, போட்டோ பார்த்து ஷாக் ஆகும் ரவி.. சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் புரொமோ | Siragadikka Aasai 3Rd September To 6Th September

அடுத்து முத்துவின் தொழிலுக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் ஒரு வில்லன் என்ட்ரி கொடுக்கிறார். அவர் என்னென்ன செய்யப்போகிறாரோ என்பதை பொறுத்திருந்து காண்போம்.

புரொமோ

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

அதில், மனோஜிற்கு வீட்டில் ஏதோ எடுக்கும் போது பணம் கிடைக்கிறது. முத்து-மீனாவிற்கு, அண்ணாமலையின் பழைய காதல் கடிதம் கிடைக்கிறது, அதை முத்து அனைவர் முன்பும் படிக்க ஆசைப்படுகிறார்.

என்னது முத்துவின் காதலியா, போட்டோ பார்த்து ஷாக் ஆகும் ரவி.. சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் புரொமோ | Siragadikka Aasai 3Rd September To 6Th September

இன்னொரு பக்கம், ரவி கப்போர்டில் தேடும் போது முத்து இளம் வயதில் ஒரு பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிறார். விரைவில் முத்துவின் பிளாஷ்பேக் கதை வரும் என தெரிகிறது, யார் அந்த பெண், காதலியா என்பதை பொறுத்திருந்து காண்போம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US