விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பியில் டாப்பில் இருந்து வரும் சீரியல்.
கதையில் ரோஹினி பற்றிய கதையை தெரிந்ததும் மீனா வீட்டில் கூறி பரபரப்பை கிளப்புவார் என பார்த்தால் அப்படியே அமைதியாக இருக்கிறார்.

ரோஹினியை எப்போது வீட்டில் உண்மையை கூறுவாய் என மட்டும் மிரட்டுகிறார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது க்ரிஷ் அம்மா இறந்துவிட்டதாக கூறி பாட்டி க்ரிஷை அண்ணாமலை வீட்டில் விட்டுச்செல்கிறார்.
க்ரிஷ் தனது வீட்டில் இருப்பது விஜயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

புரொமோ
இந்த விஷயத்தை சிந்தாமணியிடம் விஜயா கூற இருவரும் க்ரிஷை கடத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

ஆனால் எப்படியோ முத்து கடத்தல் நபர்களிடம் இருந்து க்ரிஷை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின் சிந்தாமணி தான் க்ரிஷை கடத்தினார் அதற்கு காரணம் அம்மா தான் என்கிறார்.
இந்த விஷயம் அறிந்த அண்ணாமலை விஜயாவை அடிக்க செல்கிறார், இதோ பரபரப்பு புரொமோ,