மீனா செய்த அதிரடி விஷயம்.. அடுத்து வரும் பெரிய சிக்கல்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரொமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது ஹீரோ முத்து காரை விற்றுவிட்டு நண்பர்களுக்கு உதவி செய்துவிட்டு தற்போது ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்.
அந்த விஷயத்தை பற்றி அறிந்து மீனா நேராக முத்துவின் நண்பர்களிடம் சென்று கேட்கிறார்.
அவர்கள் மொத்த உண்மையையும் மீனாவிடம் கூறிவிடுகின்றனர். சிட்டி எங்கள் கார் பணத்தை உடனே கேட்டதால் தான் முத்து காரை விற்று உதவி செய்தான் என கூறுகின்றனர்.
மீனாவுக்கு வரும் அடுத்த சிக்கல்
மீனா கடும் கோபத்தில் நேராக சிட்டியிடம் சென்று சண்டைபோட்டு எச்சரித்துவிட்டு வருகிறார்.
அதனால் கடுப்பாகும் சிட்டி மீனாவை கணவன் முத்துவிடம் இருந்து எப்படியாவது பிரிக்க வேண்டும் என சொல்கிறார். தன்னுடன் இருக்கும் மீனாவின் தம்பி சத்யாவை வைத்து இதை செய்வேன் என கூறுகிறார்.
இதனால் மீனா முத்து இடையே பிரச்சனை வரும் அளவுக்கு சம்பவங்கள் சீரியலில் வரும் என எதிர்பார்க்கலாம்.