கிரிஷ் மூலம் வசமாக சிக்கப்போகும் ரோஹினி, பரபரப்பு புரொமோ.... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்திவரும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது. கடந்த வார கடைசியில் ஸ்ருதி குழந்தை பெற்றுக்கொள்வதில் ஷாக்கிங் முடிவு எடுக்கிறார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் கிரிஷ் பார்க்க அவன் வீட்டிற்கு செல்ல பிறந்தநாள் கொண்டாட்டமும் நடக்கிறது.
அவர்களை வந்ததை பார்த்து ரோஹினி செம கோபத்தில் இனி அவர்கள் இங்கே வரக் கூடாது நீ தான் ஏதாவது செய்ய வேண்டும் என தனது அம்மாவிடம் கத்திவிட்டு செல்கிறார்.
பிறந்தநாள் முடித்து வீடு திரும்பிய முத்து மற்றும் மீனா கிரிஷ்ஷை தத்தெடுப்பது குறித்து பேசுகிறார்கள்.
புரொமோ
இந்த விஷயத்தில் முத்து-மீனா தனது குடும்பத்தினரிடம் கூறுகிறார், ரோஹினியும் இதனை கேட்கிறார். ஆனால் விஜயா வழக்கம் போல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்.
ஆனால் கடைசியில் முத்து, கிரிஷ் பாட்டி சம்மதித்தால் கண்டிப்பாக நாங்கள் அவனை தத்தெடுப்போம் என கோபமாக கூறுகிறார். அப்படி கிரிஷ் மட்டும் வீட்டிற்கு வந்தார் கண்டிப்பாக ரோஹினி சிக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த புரொமோ,