ரோஹினியின் முதல் திருமண புகைப்படத்தை பார்த்த முத்து செம ஷாக், அடுத்து நடந்தது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, கதையில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டதாக தெரிகிறது.
ரோஹினி தான் கல்யாணி, அவரது மகன் தான் க்ரிஷ் என்பது மீனாவிற்கு சில வாரங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது.
அவர் இந்த உண்மையை வீட்டில் கூறுவார் பிரச்சனை வெடிக்கும் என பார்த்தால் ரோஹினி இறந்துவிடுவேன் என மிரட்டியதால் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

புரொமோ
தற்போது ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு பரபரப்பு புரொமோ வெளியாகியுள்ளது. அதாவது ரோஹினி முன்னாள் கணவரின் உறவினர் மீண்டும் முத்துவின் கண்ணில் படுகிறார்.

அவர் தனது தம்பி மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை பிரேம் போட ஒரு கடைக்கு செல்ல அந்த புகைப்படத்தை முத்து பார்த்து செம ஷாக் ஆகிறார்.
அந்த கோபத்தில் வீட்டிற்கு வந்து அனைவரையும் அழைக்கிறார், அடுத்து என்ன ஆகுமோ, பொறுத்திருந்து பார்ப்போம்.