பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, அண்ணாமலை என்பவரின் குடும்பத்தை சுற்றிய கதையாக இந்த தொடர் உள்ளது.
சீரியலில் இந்த வார எபிசோடில், ரோஹினி மீனாவின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்று சிந்தாமணியுடன் சேர்ந்து ஒரு பிளான் போட்டார். அது இப்போது அவருக்கே பிரச்சனையாகிவிட்டது.
சிந்தாமணி பிளான் செய்தது சரியாக வரவில்லை, அவரின் திருட்டுத்தனத்தை முத்து கண்டுபிடித்து அவருக்கு செக் வைத்துவிட்டார்.
மீனாவின் பைக் போனதற்காக அவரிடம் பணமும் பெறுகிறார். வீட்டிற்கு வந்து திருடியவனிடம் ரூ. 30 ஆயிரமும், சிந்தாமணியிடம் ரூ. 40 ஆயிரமும் வாங்கிவிட்டதாக கூற, அண்ணாமலை அந்த பணத்தை வைத்து புதிய Electric பைக் வாங்கிக்கொடு என்கிறார்.
புரொமோ
பணத்தை வைத்து மீனாவிற்கு புதிய Electric பைக் வாங்கிக்கொடுக்கிறார். புதிய பைக்கை மீனா ஓட்ட முத்து ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
மீனாவிற்கு பிரச்சனை செய்ய வேண்டும் என ரோஹினி நினைத்து ஒரு பிளான் செய்ய அது ரூ. 40 ஆயிரம் நஷ்டத்துடன் விஜயாவிடம் திட்டு வாங்கி நிற்கிறார். இதோ புரொமோ,