கவுண்டமணியிடம் பாராட்டை பெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் அவர், மகிழ்ச்சியான தருணம்
சிறகடிக்க ஆசை
மக்கள் இப்போதெல்லாம் சீரியல்களில் எப்போதும் குட் அன் பேட் கதாபாத்திரங்களை பார்த்து சலித்துவிட்டார்கள்.
மிகவும் எதார்த்தமாக அழகிய குடும்ப கதையுள்ள கதைகளை தான் அதிகம் ரசிக்கிறார்கள். அப்படி மக்கள் கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.
அண்ணாமலை என்பவர் தனது 3 மகன்கள், மருமகள்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை உடையவர், ஆனால் அவரின் ஆசையை கெடுக்கும் வகையில் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் எப்படியோ பிரச்சனைகள் முடிந்து ஒன்றாக இணைந்துவிடுகிறார்கள்.
இப்போது கதையில் ரோஹினி-மனோஜ் இருவரும் பணத்தை பற்றி தங்களது குடும்பத்தில் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள், அது எப்போது வெளியே தெரியும் என தெரியவில்லை.
கவுண்டமணி
இந்த தொடரில் முத்துவின் நண்பனாக செல்வம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் பழனியப்பா. இவர் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடிக்கிறார்.
நீண்ட டயலாக் ஒன்றை எளிதாக பேசி அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அவரின் நடிப்பை பார்த்து வியந்த கவுண்டமணி அவரை பாராட்டியுள்ளார். அதோடு நீ பெரிய நடிகராக வருவாய் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறாராம்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
