சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட்!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை பேசிய விஷயம்
சிறகடிக்க ஆசை
தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து, மீனா, மனோஜ், ரோகிணி ஆகிய கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கையாக நடித்து வருபவர் நடிகை சங்கீதா லியோனிஸ். இவருக்கு இந்த சீரியல்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. மேலும் இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஓபன் டாக்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பற்றி பகிர்ந்துகொண்ட நடிகை சங்கீதா லியோனிஸ், சின்னத்திரையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசினார்.
"மீடியாவில் பெண்கள் என்றாலே வீடு மற்றும் உறவினர்கள் பயப்படுவார்கள். ஆனால், இதில் வந்து திறமையை காட்டி நிரூபித்துவிட்டால் அவர்களை சமாளித்துவிடலாம். சினிமா மற்றும் சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது என கூறுகிறார்கள். நான் சின்னத்திரை மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். ஆனால், இதுவரை எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை, எந்த காலும் வந்ததே இல்லை" என கூறியுள்ளார்.