சிட்டியிடம் சிக்கிய மீனாவின் தம்பி சத்யா.. காப்பாற்ற போராடும் முத்து! சிறகடிக்க ஆசை Promo
சிக்கலில் சத்யா
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் மீனாவின் தம்பி சத்யாவை தேர்வு எழுத விடமாட்டேன் என ரவுடி சிட்டி முத்துவிடம் சவால் விட்டிருந்தான். அதன்படி, தற்போது சத்யாவை சிட்டி கடத்திவிட்டான்.
இந்த தகவலை அறிந்த முத்து உடனடியாக சத்யாவை தேடி தனது நண்பருடன் அழைக்கிறார். மீனாவின் தங்கை சீதா தனது காதலர் போலீஸ் அருணிடம் கூறி தனது தம்பியை தேட சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை Promo
இந்த தேடலில் முத்து சத்யாவின் பைக்கை கண்டுபிடிக்கிறார். பின் சீதாவின் காதலரிடம் இருந்து சத்யா இருக்கும் லொகேஷன் கிடைக்க, முத்து அங்கு செல்கிறார்.
கண்டிப்பாக முத்துவிடம் சிட்டி அடி வாங்கப்போவது உறுதி ஆகிவிட்டது. இதுவரை வாங்கியது எல்லாம் பாத்தது என மீண்டும் முத்துவிடம் அடிவாங்கவே சிட்டி இப்படி செய்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் வரும் வாரம் சிறகடிக்க ஆசை என்னென்ன ட்விஸ்ட் எல்லாம் காத்திருக்கிறது என்று. Promo வீடியோ..

கனடாவில் கார் விபத்து மற்றும் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு: 24 வயது இளம்பெண் உயிரிழப்பு News Lankasri
