சாதனை படைத்த சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜய் டிவி வெளியிட்ட போஸ்டர்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் எப்போதுமே டாப்பில் இருந்து வருகிறது.
மக்கள் மனதை கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த ஆண்டு பல விருதுகளை விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் அள்ளி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜை லட்டர் கொடுத்து மிரட்டும் அந்த மர்ம நபர் யார் என்பதை பற்றிய விஷயம் தான் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.
ரோகினியின் முன் வாழ்க்கை குறித்த உண்மை தெரிந்தவன் தான் மனோஜை மிரட்டி வருகிறார். ஆனால், அது மனோஜிக்கு தெரியாத காரணத்தினால், தனது தம்பியும் கதாநாயகனுமான முத்து தான் தன்னை மறைமுகமாக மிரட்டி வருகிறார் என தப்பாக கணக்கு போட்டு விடுகிறார். இதனால் வீட்டிற்குள் பெரும் பூகம்பம் வெடித்துவிட்டது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த வார எபிசோடில் தான் பார்க்கவேண்டும்.
சாதனை
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகதங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் தொலைக்காட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த போஸ்டர்..

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
