வீட்டை விட்டு வெளியேறிய அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீர்யலில் இன்று
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் சொத்துக்களை பிரித்து தரும்படி மனோஜ் சண்டை போட்டதால் தற்போது மொத்த குடும்பமும் ப்ரளயமாக மாறி இருக்கிறது. என பெயரில் இருக்கும் வீட்டை எல்லாம் கொடுக்கமுடியாது என விஜயா ஒரு பக்கம்
சொத்தை பிரிக்க வேண்டாம் என முத்து சண்டை போட, வக்கீல் முன்னிலையில் மனோஜ் மற்றும் முத்து இருவரும் அடித்துக்கொள்கின்றனர். அதனால் அண்ணாமலை துயரத்தின் உச்சிக்கே செல்கிறார்.

வீட்டை விட்டு சென்ற அண்ணாமலை
மறுநாள் காலை எல்லோரும் எழுந்து பார்க்கும்போது அண்ணாமலை வீட்டில் இல்லை. அப்பாவை காணவில்லை என முத்து பதறுகிறார். அதன் பிறகு சாமி போட்டோ முன் ஒரு லெட்டர் இருப்பதை பார்த்து கொண்டு வருகிறார் மீனா. அதில் தன்னை தேட வேண்டாம், நானே ஒரு நாள் திரும்பி வருவேன் என அண்ணாமலை எழுதி இருக்கிறார்.
அதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆகின்றனர். ஆனால் மனோஜ் வேறு விதமாக பேசுகிறார். 'எனக்கு சொத்து தரக்கூடாது என்பதற்காக தான் அவர் இப்படி வீட்டை விட்டு போயிருக்கிறார்' என கூறுகிறார் மனோஜ்.
இதற்கும் நான் தான் காரணம் என விஜயா என்னை திட்டுவாரே என ரோகிணி ஒருபக்கம் புலம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
