விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட்டான சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் பிரணவ்...எந்த தொடர்?
சிறகடிக்க ஆசை
சீரியல் தொடங்கப்பட்ட நாள் முதல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் வீட்டிற்குள் பாம்பு வந்ததால் குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். முதலில் அனைவரும் வேலை இருக்கு என கோவில் வர மறுக்க பின் எப்படியோ சம்மதித்துவிட்டார்கள்.
அதேபோல் ரோஹினி-மனோஜ் தங்களுக்கு கிடைத்த பெரிய ஆர்டர் பற்றி வீட்டில் கூற அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

புதிய தொடர்
இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ரீச் ஆனவர் தான் பிரணவ். இவர் மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவியிலேயே புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதாவது சமீபத்தில் தொடங்கப்பட்ட மகளே என் மருமகளே என்ற சீரியலில் நவீன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரணவ்.
அவரது என்ட்ரி இன்றைய எபிசோட் முதல் வருகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    