தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா
கோமதி பிரியா
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி பிரியா. இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிம்புவைதான் இவர் திருமணம் செய்யப்போகிறார் என பேச்சு அடிபடுகிறது.
நடிகை கோமதி பிரியா மேரேஜ், விரைவில் குட் நியூஸ், உண்மையான காதல், பேரன்பு என சமூக வலைத்தளத்தில் திருமணத்திற்கான அனைத்து Tag-களையும் பயன்படுத்தியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் எப்போது திருமணம் என கேள்வி கேட்க தொடங்கினர்.
இந்த நிலையில், மலையாள நடிகர் ஒருவர் கோமதி பிரியா காதலித்து வருவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. நடிகை கோமதி பிரியாவுடன் இருக்கும் நடிகரின் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இப்படியிருக்க கோமதி பிரியா வெளியிட்டு இருக்கும் வீடியோவால் பிரபல நடிகர் சிம்புவின் பெயரில் இதில் அடிபட துவங்கிவிட்டது.
சிம்பு - கோமதி பிரியா திருமணம்?
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிம்பு, 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் வலம் வருகிறார். இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவை நடிகர் சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் கோமதி பிரியா வெளியிட்ட வீடியோதான் என கிசுகிசுக்கப்படுகிறது. அந்த வீடியோவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெர்சி நான் ரெடி ஆகியாச்சு, கார்த்திக்கைதான் காணவில்லை. எனக்கு ஏற்ற கார்த்தி எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. என்னை தேடி வந்துடுங்க என ஜாலியாக கோமதி பிரியா வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது. இதனால் நடிகர் சிம்புவைதான் கோமதி பிரியா திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுவரை இதுகுறித்து இருவரிடம் இருந்தும் மறுப்பு தெரிவித்து எந்த ஒரு செய்திகள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் அருகே டீசல் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து - ரயில்சேவைகள் பாதிப்பு IBC Tamilnadu
