திருமணம் குறித்து பரவும் தகவல்.. சிறகடிக்க ஆசை மீனாவின் வெற்றிக்கான ரகசியம் இதுதானா
கோமதி பிரியா
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி பிரியா. இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் பரவி வருகிறது.
நடிகை கோமதி பிரியா மேரேஜ், விரைவில் குட் நியூஸ், உண்மையான காதல், பேரன்பு என சமூக வலைத்தளத்தில் திருமணத்திற்கான அனைத்து Tag-களையும் பயன்படுத்தியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் எப்போது திருமணம் என கேள்வி கேட்க தொடங்கினர்.
இந்த நிலையில், மலையாள நடிகர் ஒருவர் கோமதி பிரியா காதலித்து வருவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், யார் அந்த நடிகர் என்று தெரியவில்லை. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை.
வெற்றிக்கான ரகசியம் இதுதானா
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் சீரியல் நடித்து வரும் கோமதி பிரியா, தமிழ்நாட்டிற்கும் கேரளத்துக்கும் பயணித்து வரும் பிஸியான நடிகையாக உள்ளார். இதனிடையே ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம், அடிக்கடி பயணங்கள் செல்வத்தையும், கோயிலுக்கு செல்வத்தையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் கோயிலுக்கு சென்றுள்ள நடிகை கோமதி பிரியா, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, அதில் "உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதற்காக, சில நேரங்களில் உங்களுக்கு தெரியாத பயணத்தில் கடவுள் உங்களை அழைத்து செல்வார். அதனால், திட்டங்களை நம்புகள்" என பதிவிட்டுள்ளார்.
இதனை வெற்றிக்கான ரகசியமாக எடுத்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.