சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி டாப் 5ல் இடம் பிடித்த விஜய் டிவி
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் தான் அதிகம் ரேட்டிங் பெற்று வந்தது. அதை தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் ஓவர்டேக் செய்து இருக்கிறது.
சிறகடிக்க ஆசை தொடரில் தற்போது வில்லி மாமியார் யாருக்கும் தெரியாமல் வீட்டை அடமானாம் வைத்து 17 லட்சம் வாங்கியது எல்லோருக்கும் தெரியவந்துவிட்டது. அதனால் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
டாப் 5ல்..
தற்போது சிறகடிக்க ஆசை தொடர் தான் விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக டாப் 5ல் இடம்பிடித்து இருக்கிறது.
டாப் 4 இடங்களை சன் டிவி தொடர்கள் பிடித்து கொண்ட நிலையில், 5ம் இடத்தை சிறகடிக்க ஆசை பிடித்து இருக்கிறது.
வழக்கமாக இனியா சீரியல் டாப் 5ல் இடம்பிடித்து வந்தது. ஆனால் தற்போது அதை சிறகடிக்க ஆசை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.