பார்லர் விஷயம் தெரிந்து கொதித்த விஜயா, ஷாக்கான ரோஹினி- சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
அண்மையில் முத்து-மீனா கட்டிய மாலை மண்டத்திற்கு எடுத்து செல்லும் நேரத்தில் சிட்டி வண்டியை தூக்கிவிட்டார்.
இதனால் பரபரப்பான காட்சிகளுடன் வண்டியை கண்டுபிடித்து மாலையை ஒப்படைத்தனர். அடுத்து இந்த தொடரில் என்ன நடக்கும் என மக்கள் யோசிப்பதற்குள் என்ன நடக்கப்போகிறது என்ற விஷயம் வெளியாகிவிட்டது.
பரபரப்பு புரொமோ
விஜயா தனது பெயரில் பார்லர் உள்ளது என சந்தோஷப்பட்டு வந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வ்நதுவிட்டது.
அதாவது பார்லர் தனது பெயரில் இல்லை என்பதை தெரிந்துகொண்ட விஜயா கடும் கோபத்துடன் ரோஹினியை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொதிக்கிறார்.
அவரின் பேச்சை கேட்டு ரோஹினி கடும் ஷாக்கில் இன்னொரு பல விஷயங்கள் தெரிந்தால் இவர்கள் என்ன செய்வார்களோ என பயப்படுகிறார்.
இதோ பரபரப்பின் உச்சமாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ,