சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை அசிங்கப்படுத்தினாலும் படப்பிடிப்பில் அனைவரும் செய்த செயல்- வைரலாகும் போட்டோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் டிஆர்பியில் கலக்கிவரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
கடந்த வாரம் இந்த தொடரில் முத்து-மீனா ஒரு பெரிய ஆர்டருக்காக இரவு எல்லாம் மாலை கட்டி பல பிரச்சனைகளுக்கு பிறகு அதை கொண்டு சேர்த்தார்கள்.
இந்த கதைக்களத்திற்கு நடுவில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரோஹினி பார்லர் பெயரை மாற்றியுள்ள விஷயம் வீட்டிற்கு மனோஜ் மூலம் தெரிய வருகிறது.
இதைக்கேட்டு விஜயா எல்லோரும் முன்பும் ஒன்றும் பிரச்சனை இல்லை என நடிக்க, ரூமிற்கு சென்று ரோஹினியை என்னை கேட்காமல் எப்படி என் பெயரை மாற்றலாம் என வெளுத்து வாங்குகிறார்.
கொண்டாட்டம்
சீரியலில் என்ன தான் மனோஜை அசிங்கப்படுத்தி வந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவருக்காக ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம் நடந்துள்ளது. அதாவது அவருக்கு பிறந்தநாள் வர சீரியல் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,
அதேபோல் இன்று வெளியாகியுள்ள சிறகடிக்க ஆசை புரொமோவில், மீனா மாலை கட்டி வந்த பணத்தில் முத்துவிற்கு காரை வாங்குகிறார். அதை சர்ப்ரைஸாக முத்துவிடம் கூற அவர் திகைத்து போய் நிற்கிறார்.
இந்த புதிய புரொமோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.