என்னது, மனோஜுக்கு இரண்டாம் திருமணமா? அப்போ ரோகினியின் நிலைமை.. முத்து கொடுத்த ட்விஸ்ட்! சிறகடிக்க ஆசை ப்ரொமோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் அனைவரின் கவனத்தை ஈர்த்து மக்களால் கொண்டாடப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலாக சிறகடிக்க ஆசை உள்ளது.
கடந்த வாரம் இந்த சீரியலில், தனது நண்பனின் தவறான அறிவுரையை கேட்டு, தனக்கு பிரச்சனையாக இருக்கும் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார் மனோஜ். இதனால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மனோஜுக்கு இரண்டாம் திருமணமா
தன்னை மிரட்டி பணம் கேட்கும் அந்த பெண்ணிடம் இப்படி நடந்துகொண்டால், பிரச்சனையை சரி செய்துவிடலாம் என எண்ணி இப்படி செய்துள்ளார். ஆனால், அதுவே தற்போது அவருக்கு மிகப்பெரிய பிரச்சையாக மாறியுள்ளது.
இந்நிலையில், மனோஜை தேடி அந்த பெண் அவரது வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என, அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மனோஜிடம் கூறுகிறார் முத்து.
இதை கேட்டவுடன் ரோகிணி, விஜயா என அனைவரும் ஷாக்காகிவிட்டனர். உண்மையாகவே மனோஜிடம் முத்து இப்படி கூறுகிறாரா? அல்லது, இது இந்த பிரச்சனையில் இருந்து மனோஜை காப்பாற்ற முத்து போடும் திட்டமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.