சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவிற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து- அவரே வெளியிட்ட வீடியோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர் தான். கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
கதையில் அண்மையில் தான் முத்து-மீனாவிற்கு திருமணம் நடந்தது, அது 300வது எபிசோடாக ஒளிபரப்பானது, அதைக்கண்டு ரசிகர்களும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குள் பெரிய பிரச்சனை வந்துவிடும் என தெரிகிறது.
மீனாவின் தம்பி சத்யா படிக்காமல் வட்டி தொழில் செய்யும் சிட்டியுடன் சுற்றிக்கொண்டிருக்கும் விஷயம் முத்துவிற்கு தெரியவர இன்று அடிதடியாகிவிட்டது. இன்னும் சத்யா பற்றி யாருக்கும் தெரியவிவ்லை, தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
நடிகை கோமதி
இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கோமதி ப்ரியா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மலையாள சீரியலில் நடிக்கும் போது காலில் அடிபட்டுள்ளது. அந்த வீடியோவை அவர் வெளியிட்டு படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட முதல் காயம் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ,