சிறகடிக்க ஆசை சீரியலில் கர்ப்பமாக இருக்கும் மீனா, விஜயா செய்யப்போவது என்ன?- இனி கலவரம் தானா, வைரலாகும் போட்டோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். மீனா-முத்து கார் வாங்கி சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆனால் ரோஹினி பார்லர் பெயர் மாறியதால் விஜயாவிடம் நன்றாக திட்டுவாங்கினார், இன்னமும் கடு கடு என்று தான் பேசுகிறார்.
அதேசமயம் ஸ்ருதியின் அம்மா அண்ணாமலை குடும்பத்திடம் இருந்து தனது மகளை பிரித்து கொண்டு வர தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
முத்து வரக்கூடாது என விஜயா அண்ணாமலையிடம் கூற, அவன் இல்லை என்றால் நானும் வரவில்லை என அதிரடியாக பேசுகிறார். ஒருவழியாக அனைவரும் நிகழ்ச்சிக்கு வர சம்மதித்துவிட்டார்கள்.
அடுத்த வார கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
மீனா கர்ப்பம்
முத்துவின் பாட்டி ஒருமுறை 3 மருமகள்களில் யார் முதலில் கர்ப்பமாக ஆகிறாரோ அவருக்கு ஊரில் இருக்கும் சொத்தை எழுதி வைக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.
இந்நிலையில் தான் மீனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மீனா கர்ப்பமாக இருக்கிறாரா சந்தோஷம் என கமெண்ட் செய்தாலும், விஜயாவிற்கு தெரிந்தால் கலவரமே வெடிக்குமே என கமெண்ட் செய்கிறார்கள்.
ஆனால் உண்மையில் என்ன விஷயம் என்றால் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி ப்ரியா வேறொரு நடிகருடன் நடித்த ஒரு வீடியோ கிளிப்ஸ் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் மீனா கர்ப்பமாக இருப்பது போல் நடித்த காட்சியை தான் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக்கியுள்ளனர்.
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)