சிறகடிக்க ஆசை மீனா மாற்றம்? புது மீனா இவர்தான் என பரவிய செய்திக்கு நடிகர் விளக்கம்
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். இதில் முத்துவாக வெற்றி வசந்த் மற்றும் மீனாவாக கோமதி பிரியா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா விரைவில் சீரியலில் இருந்து விலகுகிறார் என செய்தி பரவி இருக்கிறது. விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் அதனால் அவர் விலகுகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.
உண்மை இதுதான்
கோமதி பிரியாவுக்கு பதில் ஆல்யா மானசா தான் இனி மீனாவாக நடிக்க போகிறார் என செய்தியை சிலர் பரப்பி வருவது பற்றி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மீனா மாற்றப்படுகிறார் என பரவும் செய்தி உண்மை அல்ல. கடைசி வரை கோமதி பிரியா தான் மீனாவாக நடிப்பார் என அவர் கூறி இருக்கிறார்.
அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க.