சிறகடிக்க ஆசை சீரியலில் வந்த ட்விஸ்ட்.. மீனாவை அசிங்கப்படுத்தியவர்களுக்கு முத்து கொடுத்த ஷாக்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் ரசிகரங்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்பாவி மருமகள், பணத்தாசை பிடித்த கொடுமைக்கார மாமியார் ஆகியோர் இடையே நடக்கும் பிரச்சனைகள் தான் இந்த தொடரின் ஒன் லைன் கதை.
மீனாவிடம் மூன்றாவது மருமகள் ஸ்ருதி தனது துணியை துவைத்து கொடுக்க பணம் கொடுத்து அசிங்கப்படுத்துகிறார். அதை அவர் கணவர் முத்துவிடம் சென்று சொல்லி கவலைப்படுகிறார்.
பூக்கடை வைத்து கொடுத்த முத்து
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் முத்து ஒரு பெரிய விஷயத்தை செய்திருக்கிறார். அதனால் ஒரு புது ட்விஸ்ட் கதையில் வந்திருக்கிறது.
மீனாவுக்காக அவர் ஒரு பூக்கடை வைத்து கொடுக்கிறார். அதை அப்பா, அம்மா முன்னிலையில் திறக்க அவர் ஸ்ருதியை தான் அழைக்கிறார். அதற்காக அவர் கொடுத்த பணத்தையே திருப்பி கொடுத்து அசிங்கப்படுத்திவிடுகிறார் முத்து.
இனிமேல் மீனாவும் சொந்தமாக தொழில் செய்கிறார் என அந்த வீட்டில் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் அவர் அப்படி செய்திருக்கிறார்.