ஸ்ருதி, ரவியை நேரில் சந்தித்து பேசும் முத்து-மீனா- அடுத்து நடக்கப்போவது என்ன, சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் மீனாவை செயினை திருடிவிட்டார் என்று ஸ்ருதி அம்மா-அப்பாவை அவரை கேவலமாக பேசுகிறார்கள். இதனால கோபமான முத்து, ஸ்ருதி அப்பாவை அடிக்க ஒரே பிரச்சனையாகிவிடுகிறது.
இதனால் ஸ்ருதி-ரவி வீட்டிற்கு வரவில்லை, இது அண்ணாமலைக்கு கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் விஜயா முத்து-மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப சண்டை போட பின் அண்ணாமலை அதிரடி முடிவு எடுத்து தனது மனைவியை ஆப் செய்கிறார்.
புதிய புரொமோ
ரோஹினி கர்ப்பமாக இருக்கிறார் என்ற கதைக்களத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.
தற்போது வந்துள்ள புதிய புரொமோவில் முத்து மற்றும் மீனா இருவரும் ஸ்ருதி ரவியை தனித்தனியாக சந்தித்து நடந்ததை கூறுகிறார்கள். மீனா ஸ்ருதியிடம் நான் எனது கணவர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என பேசுகிறார்.
ஸ்ருதி ரவி, மீனா முத்து பேச்சை கேட்டு வீட்டிற்கு வருவார்களா இல்லையா என்பதை அடுத்தடுத்த எபிசோடில் காண்போம்.
You May Like This Video