சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரொமோ.. முத்துவின் அண்ணன் மண்டையை உடைத்தது யார்?
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக தற்போது இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. பொய் சொல்லி திருமணம் செய்து கொண்ட ரோகிணி சிக்கிக்கொள்ளாமல் இருக்க மலேசியா மாமா என சொல்லி ஒரு நடிகருக்கு பணம் கொடுத்து நடிக்க வைக்கிறார்.
கிராமத்தில் எல்லோருக்கு மத்தியிலும் ரோகிணி சிக்கிக்கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதற்காக முத்து ரோகிணியின் மாமாவை குடிக்கவைத்து உண்மையை பேச வைக்க நினைத்தாலும் அந்த திட்டம் ஒர்கவுட் ஆகவில்லை.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தில் உறியடிக்கும் போட்டி நடப்பது அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
அதில் மீனா தவறுதலாக முத்துவின் அண்ணன் மண்டையில் அடித்து இருக்கிறார். இறுதியில் முத்து தான் உறியடித்து வெற்றி பெற்று இருக்கிறார்.
ப்ரொமோ இதோ..