வசமாக சிக்கிய ரோகிணி.. சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கபோவது இதுதான்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை. மக்கள் மனம் கவர்ந்த இந்த சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என கூறப்படுகிறது.
இந்த சீரியலின் தற்போதைய கதையின்படி, மனோஜ் இடம் இருந்து ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய நபரை அனைவரும் தேடி கொண்டு இருக்கிறார்கள். அதற்கான CCTV ஆதாரத்தை கூட திரட்ட முத்து, மீனா முயற்சி செய்து வந்த நிலையில், அந்த CCTV ஆதாரம் தனக்கு கிடைக்க வேண்டும் என, சிட்டியிடம் கூறி எடுக்க சொன்னார் ரோகிணி. ஆனால், சிட்டியால் அது முடியவில்லை.
வசமாக சிக்கிய ரோகிணி
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த வயதான தம்பதி முத்துவின் காரில் பயணம் செய்ய, அவர்களிடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார் முத்து. அவர்கள் இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விருந்தும் வைக்கிறார்.
மலேசியாவில் இருந்து இவர்கள் வந்துள்ளதால், ரோகிணியின் தந்தையை பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். இதனால் வசமாக சிக்கிக்கொள்கிறார் ரோகிணி. இதிலிருந்து ரோகிணி தப்பிப்பாரா அல்லது, மாட்டிக்கொள்வாரா என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை நீரையும் மலத்தையும் வீசிய நபர்கள்; யாருடைய தூண்டுதல்? கொதித்த அண்ணாமலை IBC Tamilnadu
