ரோகிணிக்கு மகனா.. விஜயாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் எத்தனை பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருப்பது மீனா எப்போது சிக்குவார் என்பது தான்.
திருமணமாகி 7 வயதில் மகன் இருப்பதை மறைத்து மனோஜை திருமணம் செய்துகொண்டு அவர் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
துணிக்கடையில் சிக்கினார்
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் ஒரு பரபரப்பான சம்பவம் காட்டப்பட்டு இருக்கிறது. ரோகி்ணி தனது மகனுக்கு துணிக்கடையில் ட்ரெஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் துணியை பேக் செய்ய கொடுத்துவிட்ட பிறகு அங்கு அவரை விஜயாவும் அவரடு ப்ரெண்டும் பார்த்துவிடுகின்றனர். அந்த நேரத்தில் துணிக்கடைக்காரர் வந்து ‘உங்க மகனுக்கு ட்ரெஸ் பிடிக்கும்’ என சொல்லிவிட்டு பையை கொடுக்கிறார்.
அதை கேட்டு விஜயா ஷாக் ஆகிறார். 'உனக்கு மகனா..' என அதிர்ச்சி உடன் கேட்கிறார். ரோகிணி இதை எப்படி சமாளிப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ப்ரோமோ இதோ..