2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய விஜயா, மீண்டும் வீட்டிற்கு திரும்பிவிட்டார். ரூ. 2 லட்சத்தை வக்கீல் இடமிருந்து வாங்கிய விஜயா, மீனாவின் தம்பி மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றார்.
இதனால் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது. ரூ. 2 லட்சத்தை பார்வதியிடம் கொடுத்து வைத்திருந்தார் விஜயா. இதனை தெரிந்துகொண்ட ரோகிணி, சிட்டிக்கு பணம் தரவேண்டும் என்பதால், பார்வதியிடம் இருக்கும் ரூ. 2 லட்சத்தை திருடிவிட்டார்.
கோபத்தில் விஜயா?
பணம் காணவில்லை என பார்வதி, விஜயாவிடம் கூற, இந்த இடத்திற்கு மீனா வந்ததை தெரிந்துகொண்டு, மீனா தான் இந்த பணத்தை திருடி இருக்க வேண்டும் என விஜயா கடும் கோபத்துடன் கூறுகிறார்.
மீனா தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என விஜயா முடிவு செய்துவிட்ட நிலையில், உண்மையில் இந்த ரூ. 2 லட்சத்தை திருடிய ரோகிணி மாட்டிக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ இதோ..

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
