தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தருணம்.. சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போகிறது இதுதான்

Kathick
in தொலைக்காட்சிReport this article
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போதைய கதைகளம்படி, மனோஜ் தனக்கென்று மிகப்பெரிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
இதற்காக ரூ. 3 கோடி செலவு செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், இது மோசடி என தெரியாமல் மனோஜ் சிக்கிக்கொண்டுள்ளார்.
வெளிவரும் உண்மை
இந்த நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மனோஜை ஏமாற்றிய பெண் முத்துவிடம் சிக்கிக்கொள்கிறார்.
தனது அப்பாவின் உழைப்பில் இருந்து வந்த பணத்தை திருப்பித்தரவேண்டும் என முத்து கூட, அதை நான் மனோஜ் இடம் வட்டியுடன் கொடுத்துவிட்டேன் என அந்த பெண் கூறுகிறார்.
இந்த உண்மையை என் குடும்பத்தினரிடம் வந்த கூற வேண்டும் என முத்து சொல்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில், தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திருப்பம் வரும் வாரத்தில் நடக்கவுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
You May Like This Video