வயிற்று வலியால் கதறிய விஜயா, மனோஜ்.. சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரையில் டாப்பில் இருக்கிறது. விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் நம்பர் 1 சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசையின் வரும் வார ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அடுத்த வார ப்ரோமோ
இதில், விஜயா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் எதற்காக அதற்கான நிபுணரை அழைத்து, அவர் சொல்வதை கேட்கிறார். அதன்பின், அவர் சொன்ன டயட்-ஐ விஜயா மட்டுமின்றி அவரது மகன் மனோஜும் பின்தொடருகிறார்.
முதலில் இது நன்றாக இருக்கிறது என விஜயா கூறினாலும், பின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. விஜயா மற்றும் மனோஜ் இருவருக்கும் வயிற்றில் வலி ஏற்பட பெட் ரூமிற்கும், பாத் ரூமிற்கும் அழைக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் 'ஐய்யையோ எங்களால் முடியவில்லை' கதற துவங்கிவிட்டனர். இறுதியில் இந்த டயட் எங்களுக்கு வேண்டாம் என்ற முடிவு செய்துவிட்டனர். கதை ஒரு பக்கம் சீரியஸாக நகர்ந்தாலும், அவ்வப்போது இப்படி நகைச்சுவையும் நம்மை ரசிக்க வைக்கிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..