தோனியுடன் நடித்தது குறித்து பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் பாட்டி ரேவதி- என்ன கூறினார்?
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தி வருவது சிறகடிக்க ஆசை சீரியல் தான். மற்ற சீரியல்கள் நிகழ்ச்சிகள் எல்லாம் சன் டிவி சீரியல்களுடன் பெரிய அளவில் போட்டி போடவில்லை.
இப்போது இந்த கதையில் ஸ்ருதி-ரவி இருவரும் பிரச்சனைக்கு பிறகு தனியாக வாழ்கிறார்கள், முத்து-மீனா தனித்தனியாக போய் பேசுகிறார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
இதற்கு இடையில் பணம் கேட்ட மனோஜிடம், வீட்டின் பத்திரம் வைத்து பணம் கேள் என ரோஹினி தனது கணவரை ஏற்றி விட இன்று அந்த கதைக்களம் தான் ஒளிபரப்பானது.
வழக்கம் போல் மனோஜ் வீட்டில், வீட்டை வைத்து பணம் வேண்டும் என கேட்ட யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் விஜயா அவரை செமயாக கோபத்துடன் திட்டிவிடுகிறார்.
பாட்டி ரேவதி
இந்த தொடரில் விஜயாவையே மிரட்ட அண்ணாமலையின் அம்மாவாக ரேவதி நடித்து கலக்கி வருகிறார். இவர் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியுடன் இணைந்து விளம்பரம் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், இந்த விளம்பரத்தில் நடிக்க ஆடிஷன் கொடுத்தேன், இரவு 10 மணிக்கு போன் செய்து தேர்வு ஆகிவிட்டேன் என்றார்கள்.
தோனியிடம் பர்சனலா பேச முடியவில்லை, ஹலோ மட்டும்தான் சொன்னேன். படப்பிடிப்பு முடிந்த பிறகும் எதுவும் பேச முடியவில்லை என கூறியுள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
