ரோகிணிக்கு வீடு தேடி வரும் ஆப்பு.. முத்து செய்த விஷயம் அப்படி! சிறகடிக்க ஆசை ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது முத்துவை ஏமாற்றி மொத்த பணத்தையும் வைத்து மனோஜ் - ரோகிணி இருவரும் ஒரு கடையை திறந்து இருக்கின்றனர். மேலும் ரூம் பிரச்சனையும் வீட்டில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரோகிணி சீக்ரெட் ஆக மறைத்து வைத்திருக்கும் தனது மகன் க்ரிஷ்ஷை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக அவரது அம்மாவிடம் இருந்து கால் வருகிறது. அதனால் ஹாஸ்பிடல் செல்கிறார். அங்கு முத்து மற்றும் மீனா ஆகியோரும் வருவதால் அதிர்ச்சி ஆகிறார்.
வீட்டுக்கே வரும் சிக்கல்
ஹாஸ்பிடலில் எப்படியோ சமாளித்த ரோகிணி, பிரச்சனை முடிந்தது என இருக்கிறார். ஆனால் முத்து மற்றும் மீனா இருவரும் ரோகிணியின் மகனை கண்ணில் கட்டுடன் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.
இது என்ன ஹோட்டலா இல்லை ஹாஸ்ப்பிடலா, யார் வேணும்னனும் வந்து தங்க என விஜயா கோபமாக கேட்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி தனது ரூமை தருவதாக கூறுகிறார் (பெத்த மகனாச்சே).
அதன் பின் விஜய் ரோகிணியிடம் சென்று அவர்களை வீட்டை விட்டு அனுப்ப எதாவது செய்ய வேண்டும் என கூறுகிறார்.
வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ.