மீனாவின் பணம் போச்சு.. முத்து அதிரடியாக செய்த விஷயம்! சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிடருகிறது. ரோகிணி பற்றிய பாதி உண்மை தெரிந்துவிட்ட நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கிறான் என்ற உண்மை எப்போது தெரியவரும் என எல்லோரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
மறுபுறம் மீனாவின் தொழிலுக்கு வில்லியாக இருக்கும் சிந்தாமணி தற்போது ஒரு விஷயத்தை செய்து மீனாவுக்கு பெரிய சிக்கல் கொடுத்து இருக்கிறார்.
அவரிடம் இருக்கும் பணத்தை சிலர் திருடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். மீனா கீழே விழுந்து அடிபட்டு முத்துவிடம் வந்து அதை பற்றி சொல்கிறார்.
முத்து அதிரடி
அதன் பின் முத்து பணத்தை பறித்து சென்றது யார் என தெரிய மீனாவுக்கு ஆர்டர் கொடுக்க இருந்த மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு இருக்கும் பணியாளரிடம் தற்போது ஆர்டரை வாங்கியது யார் என கேட்கிறார்.
சிந்தாமணி தான் வாங்கி இருக்கிறார் என அவர் சொல்ல, முத்துவுக்கு அவர் மீது சந்தேகம் வருகிறது. சிந்தாமணி இதை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை, அவருக்கு யாரோ தகவல் சொல்கிறார்கள் என முத்துவின் நண்பரும் சந்தேகப்படுகிறார்.
விஜயா தான் மீனாவுக்கு எதிராக இதை செய்கிறார் என முத்து கண்டுபிடிப்பாரா? ப்ரோமோ இதோ.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
