ரோகினிக்கு பளார் விட்ட முத்து.. சிறகடிக்க ஆசை நாளைய ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ரவி செய்த ரகசிய திருமணத்தால் பெரிய பிரச்சனை வந்த நிலையில் முத்து கோபத்தில் மீனாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகிறார்.
அதனால் மீனா முத்துவை சந்தித்து பேசிவிட்டு வருகிறார். அதன் பின் பாரில் முத்து குடித்துக் கொண்டிருக்கும்போது மீனா எதாவது விபரீத முடிவு எடுத்துவிட போகிறார் என யோசிக்கிறார். அதனால் நண்பரை வைத்து மீனாவுக்கு போன் செய்ய வைக்கிறார். ஆனால் மீனா போனில் பேசுவதில்லை.
நாளைய ப்ரோமோ
அதன் பின் நாளைய எபிசோடில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து குடிபோதையில் வீட்டுக்கு சென்று சண்டை போடுகிறார். அப்போது அவர் ரோகிணியை பளார் என அறைந்து விடுகிறார்.
இதை எல்லாம் பார்த்து அப்பா அண்ணாமலைக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது.
[]