புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது தொடர்ந்து பரபரப்பான திருப்பங்கள் உடன் சென்றுகொண்டிருக்கிறது. ரோகிணி எப்போது தான் சிக்குவார் என சின்னத்திரை ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், ஆனால் அது நடந்த பாடில்லை.
இந்நிலையில் தற்போது முத்து மற்றும் மீனா இருவரும் சொந்தமாக புது தொழில் தொடங்குகின்றனர்.
வயிற்றெரிச்சலில் விஜயா
முத்து தான் தொடங்கி இருக்கும் டிரைவிங் ஸ்கூலுக்கு அப்பா அண்ணாமலையின் பெயரை தான் சூட்டி இருக்கிறார். அதை பார்த்து அம்மா விஜயாவுக்கு வயிற்றெரிச்சல்.
ஆரத்தி எடுத்து தொடங்கி வைக்கும்படி அண்ணாமலை கூற, 'உங்க பெயரில் தானே இருக்கு, நீங்களே எடுங்க' என கூறுகிறார் அவர்.
அதன் பின் அவருக்கு அண்ணாமலை அட்வைஸ் கூற அவரும் ஆரத்தி எடுக்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.