ரூம் பிரிப்பதில் வந்த புது பிரச்சனை.. வெளியில் அனுப்பப்பட்ட ரோகிணி! சிறகடிக்க ஆசை புது ப்ரொமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் முத்து மீனாவின் திருமண நாள் மற்றும் அதை சுற்றி நடந்த விஷயங்கள் பரபரப்பாக கதையை நகர்த்தியது.
ஊரில் இருந்து முத்துவின் பாட்டி வந்திருப்பதால் அவர் மீனாவுக்கு ஆதரவாக பேசி விஜயாவுக்கு நோஸ்கட் கொடுத்து வருகிறார்.
ரூம் பிரச்சனை
வீட்டில் இரண்டு ரூம்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் வீட்டில் இருக்கும் மூன்று ஜோடிகளின் மாறி மாறி அந்த அறைகளில் தங்கி கொள்ள வேண்டும் என பாட்டி சொல்கிறார்.
முதலில் முத்து மற்றும் மீனா அங்கு தங்கட்டும் என சொன்னதால், மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வெளியில் வந்து தூங்குகின்றனர். தன் பொருட்கள் வேண்டும் என மனோஜ் அடிக்கடி வந்து கதவை தட்டியதால் முத்து கோபமாகி திட்டுகிறார்.
அடுத்த வாரம் ரவி மற்றும் ஸ்ருதி வெளியில் வந்து படுப்பார்கள். ஸ்ருதி நிச்சயம் எதாவது செய்வாள் பிரச்சனை பெரிதாகும் என ரோகிணி திட்டம் போடுகிறார்.