பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
படித்த அறிவாளி மனோஜ், படிக்காத மேதையாக முத்து, நான் என் வேலையை மட்டும் கவனிக்கிறேன் என ரவி இவர்களின் குடும்ப கதை தான் சிறகடிக்க ஆசை சீரியல்.
இப்போது கதையில் மனோஜ் தனது தொழிலை பெரிதுப்படுத்துகிறேன் என அவலக்கால் வைக்க இப்போது அதுவே பிரச்சனையாக வந்து நிற்கிறது.
தொழிலுக்காக ஒருவரிடம் ரூ. 30 லட்சம் வாங்கிய மனோஜ் இப்போது வந்த பெரிய ஆர்டர் கேன்சல் ஆனதால் கடன் காரணாக உள்ளார்.

பணம் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் மனோஜ் சொத்தை பிரித்து கேட்க வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது.

புரொமோ
சொத்தை பிரிக்க கூடாது என முத்து-ரவி கெஞ்ச மனோஜ் நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நான் கோர்ட்டுக்கு போவேன் என கூறுகிறார். அடுத்த நாள் அண்ணாமலை வீட்டைவிட்டு வெளியே செல்ல அனைவரும் அவரை தேடி அலைந்தார்கள்.

தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், அண்ணாமலை மனோஜ் பணம் வாங்கியவரிடம் சென்று மொத்த பணத்தை கட்டி அவரை வீட்டிற்கு வர வைக்கிறார்.
அவர் அண்ணாமலை கையெழுத்து போட்ட பேப்பரை கிழித்துவிடுகிறார், ஆனால் மனோஜ்-ரோஹினியிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து கேட்கிறார், அது எதற்கு என்பது மட்டும் தெரியவில்லை.
இதோ புதிய புரொமோ,
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri