சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது- ரசிகர்களின் வாழ்த்து மழையில் பிரபலம்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் வெற்றி வசந்த்-கோமதி ப்ரியா என்ற புதிய ஜோடி இணைய வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா என்ற இரு கதாபாத்திரத்தை வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் இப்போது விஜய்யின் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது.
பொங்கல் கொண்டாடுவதற்காக தற்போது அண்ணாமலை குடும்பம் சொந்த ஊர் சென்றுள்ளனர், அங்கு ரோஹினியின் மாமா வர எபிசோட் விறுவிறுப்பாகியுள்ளது.
ரோஹினியின் உண்மை முகம் குடும்பத்திற்கு தெரியுமா, இல்லை மாமாவை வைத்து சமாளித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
வெற்றி வசந்த்
முத்து கதாபாத்திரத்தின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்துள்ள வெற்றி வசந்திற்கு 2023ம் ஆண்டிற்கான Emerging Talent விருதை பெற்றுள்ளார்.
விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
அவருக்கு ரசிகர்களும் மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.