ஹிட்டாக ஓடும் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... இவர்தான்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியில் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் மீனாவின் தங்கை சீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சிகள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் ரோஹினியை பிளாக்மெயில் செய்பவர் வித்யா வீட்டிற்கு சென்று இன்னும் பணம் வரவில்லை.
ரோஹினிக்கு போன் போடு என கூறி அவரை மிரட்டுகிறார்.
கடைசியாக சிட்டியிடம் சென்று ரோஹினி மிரட்டுபவர் குறித்து கூற அவர் இன்னும் வீடியோ வரவில்லை, நான் சொன்னதை செய்யவில்லையே என கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
புதிய என்ட்ரி
கதை விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் கதையில் புதிய என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது புதியதாக குமரன் என்பவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.
அவரது கதாபாத்திரம் குறித்து தெரியவில்லை, ஆனால் அவர் சீதாவிற்கு பார்க்கும் மாப்பிள்ளையாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.